முதல்வர் ஸ்டாலினுடன் ஆளுநர் ஆர்.என். ரவி. 
தமிழ்நாடு

ஆளுநரின் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பு!

ஆளுநரின் தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவிப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

சுதந்திர நாளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து செயல்பட்டுவரும் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆக. 18 மற்றும் ஆக. 19 ஆகிய நாள்களில் நடைபெறும் இரண்டு பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களில் முதல்வர் ஸ்டாலினின் அறிவுத்தலின்படி பங்கேற்கப் போவதில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

மேலும் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா முறையாக தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு அவர் ஒப்புதல் அளிக்காமல், தாமதப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

அதுமட்டுமன்றி, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழகங்களின் சட்டம் தொடர்பாக வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பினைப் பெற்ற பின்பு
பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தடையாணை பெற்றார்.

அந்தத் தடையாணையினை நீக்கிட உச்ச நீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு அணுகியுள்ளது. உச்சநீதிமன்றத்தில், ஆளுநர் மேற்படி பா.ஜ.க. பிரமுகர் தெரிவித்த கருத்துகளை ஆதரிக்கும் வகையில் முந்திக்கொண்டு போய் வாதுரை தாக்கல் செய்துள்ளார். இது அவரது அரசியல் சார்பு தன்மையை அப்பட்டமாக வெளிக்காட்டுவதோடு, அவரது ஒருதலைபட்சமான நடவடிக்கைக்கும் இது ஒரு உதாரணமாக விளங்குகிறது.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைக்கழங்களில் துணைவேந்தர்கள் இல்லாமல் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும்  நிலைமைக்கு ஆளுநரின் செயல்பாடுகளும், அவர் போட்டுவரும் முட்டுக்கட்டைகளும்தான் காரணம்.

இந்தச் சூழ்நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஆக. 15 அன்று கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டார். 

மேலும், முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி தானும் ஆக. 18 மற்றும் ஆக. 19 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள அழகப்பா பல்கலைக்கழகம்  மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழங்களின் பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்கப் போவதில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

Higher Education Minister K.V. Chezhiyan has said that Chief Minister Stalin will not participate in the tea party hosted by Governor R.N. Ravi on the occasion of Independence Day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

காந்தி கண்ணாடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நயன்தாராவின் புதிய படத்தின் டீசர் அறிவிப்பு!

தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..! | செய்திகள்: சில வரிகளில் | 14.08.25

நான்காண்டு ஆட்சி! ஆப்கன் தலைநகரில் மலர்மழை பொழியும் தலிபான்கள்!

SCROLL FOR NEXT