முதல்வர் ஸ்டாலின் 
தமிழ்நாடு

தூய்மைப் பணியாளர்களின் மாண்பை விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை : ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தநிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, அவர்களை நேற்று நள்ளிரவில் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், தூய்மைப் பணியாளர்களுக்கான பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அது தொடர்பான விவரங்களை அமைச்சர் தங்கம் தென்னரவு வெளியிட்டார்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது திராவிட மாடல் அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.

4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத்திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து,

தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு

தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை

தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி

தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு

தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள்

பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி

தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம் முதலிய புதிய நலத்திட்டங்களையும் செயல்படுத்தவுள்ளோம்!

இது என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு -காஷ்மீர் மேகவெடிப்பு: வெள்ளத்தில் சிக்கிய 2 சிஐஎஸ்எஃப் வீரர்கள் பலி!

அமெரிக்கா: சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வெளியேற சலுகையா?

காவல்துறை அதிகாரியாக சூர்யா?

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு! 120 பேர் மீட்பு!

காலமானார் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர்!

SCROLL FOR NEXT