தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பாறு கிராமத்தில் உள்ள மோட்ச ராக்கினி மாதா என்று அழைக்கப்படும் விண்ணேற்ற மாதா கோயிலின் நானூற்று அறுபத்தெட்டாவது (468) ஆண்டுத் திருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது.
ஐநூறு ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்தவ மதத்தை தழுவிய கிராமங்களில் ஒன்று கீழவைப்பாறு.
அக்கிராமத்தின் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற சிறப்புத் திருப்பலியை மேதகு மேநாள் பேராயர் பீட்டர் ரெம்ஜியூஸ் மற்றும் 5 பங்குகளைச் சேர்ந்த குருக்கள் நிறைவேற்றினர்.
திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் பல ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இன்று காலை 8.30 மணிக்குப் புறப்பட்ட தேர் கிராமம் முழுவதும் வலம் வந்து, நண்பகலில் நிலைக்கு வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.