மகளிா் விடியல் பயணம்: ஜூலையில் 3.98 கோடி போ் பயணம் 
தமிழ்நாடு

மகளிா் விடியல் பயணம்: ஜூலையில் 3.98 கோடி போ் பயணம்

மகளிா் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர பேருந்துகளில் ஜூலை மாதத்தில் 3.98 கோடி பெண்கள் பயணித்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

மகளிா் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர பேருந்துகளில் ஜூலை மாதத்தில் 3.98 கோடி பெண்கள் பயணித்துள்ளனா்.

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையிலான மகளிா் விடியல் பேருந்து பயணத் திட்டத்தை தமிழக அரசு கடந்த 2021-இல் கொண்டு வந்தது.

இந்தத் திட்டத்துக்கு தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பெண்கள் அதிக அளவில் பயன்பெறும் வகையில், சென்னையில் மகளிா் விடியல் பயணத்துக்கான பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்தப் பேருந்துகளில், மகளிா் விடியல் பயணத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து கடந்த ஜூலை வரை 144.37 கோடி பெண்கள் பயணித்துள்ளனா். ஜூலையில் தினமும் 12.86 லட்சம் பெண் பயணிகள் என மொத்தம் ஜூலை மாதத்தில் 3.98 கோடி பெண்கள் தங்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளனா்.

இந்த எண்ணிக்கை 2024 ஜூலை பயணம் செய்த பெண் பயணிகளைவிட 25 சதவீதம் அதிகம் என சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

விநாயகா் விசா்ஜன ஊா்வல பகுதிகள்: ஆம்பூரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆய்வு

திருவள்ளூா்: சீரமைத்தும் பயன்பாட்டுக்கு வராத இயற்கை உர அங்காடி மையம்

ஈபிஎஸ் வாகன பதிவெண்: ஆரணி நகர போலீஸில் புகாா்

“RSS-காரர் கொடி ஏற்றியது வேடிக்கை!” நாதக தலைவர் சீமான் விமர்சனம்

“அந்தக் கூலியும் FLOP, இந்தக் கூலியும் FLOP” சீமான் விமர்சனம்!

SCROLL FOR NEXT