வங்கக் கடலில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா இடையே இன்று (ஆக.17) குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் என்றும், இந்தப் புயல் சின்னம் வரும் 19 ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு நிலவி வருகிறது.
இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) முதல் ஆக. 23 வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஆங்காங்கே சாரல் மழை பெய்து வந்தது. இதைத் தொடர்ந்து நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு - தீர்மானம் நிறைவேற்றம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.