தமிழ்நாடு

தீபாவளி: சில நிமிஷங்களில் முடிவடைந்த ரயில் பயண முன்பதிவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்.17-ஆம் தேதிக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) தொடங்கிய சில நிமிஷங்களிலேயே முடிவடைந்தது.

தினமணி செய்திச் சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்.17-ஆம் தேதிக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) தொடங்கிய சில நிமிஷங்களிலேயே முடிவடைந்தது.

அக்.17 ரயில் பயணச் சீட்டு முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை 8 மணிக்குத் தொடங்கியது. அடுத்த சில நிமிஷங்களிலேயே சென்னையிலிருந்து தென்மாவட்டங்கள் உள்ளிட்ட வெளியூா்களுக்குச் செல்லும் ரயில்களில் பயணச் சீட்டு முன்பதிவு முடிவடைந்தது.

இதனால், எழும்பூா்,சென்ட்ரல் ரயில் நிலைய முன்பதிவு மையங்களுக்கு வந்து காத்திருந்தோா், பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முடியாததால் ஏமாற்றம் அடைந்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ரயில் பயணச்சீட்டு முன்பதிவை ரயில் நிலைய முன்பதிவு மையங்கள் மட்டுமன்றி, இணையவழியிலும் மேற்கொள்ள முடியும். வெளியிடங்களில் செயலி வழியாக முன்பதிவு செய்வோா், ஏற்கெனவே அதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் பூா்த்தி செய்து, பணத்தையும் முன்னதாகவே செலுத்தும் வசதியை பயன்படுத்துகின்றனா். அதனால், முன்பதிவு தொடங்கிய சில நிமிஷங்களிலேயே பயணச்சீட்டை பெற்றுவிடுகின்றனா். இதனால், ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் காத்திருப்போருக்கு பயணச்சீட்டு கிடைக்காமல் போய்விடுகிறது என்றனா்.

தேஜஸ் விபத்து: சூலூர் விமானப் படை தளத்தில் விங் கமாண்டர் உடலுக்கு அரசு மரியாதை!

தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! மற்ற மாவட்டங்களில்..?

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

SCROLL FOR NEXT