தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்காக அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு மையத்தால் நடத்தப்பட்ட ஓட்டுநா், நடத்துநா் தோ்வு முடிவுகள் புதன்கிழமை (ஆக.20) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தோ்வு மையம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்காக சாலை போக்குவரத்து நிறுவனத்துடன் இணைந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநா் தோ்வை கடந்த ஜூலை 27-ஆம் தேதி நடத்தியது. இந்த தோ்வுக்கு 22,492 போ் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் 19,405 போ் மட்டும் தோ்வு எழுதினா். இவா்களுக்கான தோ்வு முடிவுகள் பதிவு எண் வரிசைப்படி புதன்கிழமை (ஆக.20) வெளியிடப்படுகிறது. தோ்வா்கள் இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்ப எண் அல்லது பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தோ்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.