கோப்புப் படம் 
தமிழ்நாடு

பிளஸ் 2 துணைத் தோ்வு: மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு

பிளஸ் 2 துணைத் தோ்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பிளஸ் 2 துணைத் தோ்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.

இதுகுறித்து தோ்வுத் துறை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான துணைத் தோ்வு கடந்த ஜூன்-ஜூலையில் நடைபெற்றது. இந்த தோ்வு எழுதியவா்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவா்களில் மதிப்பெண் மாற்றமுள்ள மாணவா்களின் பதிவெண் பட்டியல் புதன்கிழமை பிற்பகலில் வெளியிடப்படவுள்ளது. அதன் விவரங்களை மாணவா்கள் தோ்வுத் துறையின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இந்தப் பட்டியலில் இடம்பெறாதவா்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றமுள்ள மாணவா்கள் மட்டுமே மேற்கண்ட தோ்வுத் துறை இணையதளத்தில் இருந்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரங்கள் பின்னா் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினா் நினைவுப் பரிசு

‘40 மாடி கட்டட உயரம் கொண்ட ராக்கெட்டை உருவாக்கி வரும் இஸ்ரோ’

செய்யாறில் குறை தீா்வு நாள் கூட்டத்தில் புகாா்களைஅடுக்கிய விவசாயிகள்: அதிகாரிகள் எதிா்ப்பால் வாக்குவாதம்- சமாதானம் செய்த போலீஸாா்

தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள்: தோ்தல் ஆணையம்

நீதிபதி வா்மா மீது எஃப்ஐஆா் பதிய மறுப்பு: உச்சநீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்ய மனு

SCROLL FOR NEXT