வைகோவுடன் மல்லை சத்யா 
தமிழ்நாடு

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிக நீக்கம்!

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிக நீக்கப்பட்டது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

மதிமுக துணை பொதுச் செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதாக அந்த கட்சியின் தலைவர் வைகோ அறிவித்துள்ளார்.

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், மல்லை சத்யா அதிருப்தியில் இருந்தார்.

இந்த நிலையில், விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போல், மல்லை சத்யா தனது துரோகம் செய்துவிட்டதாக வைகோ அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த மல்லை சத்யா, தன்னை துரோகி எனக் கூறியதற்கு பதிலாக விஷம் கொடுத்திருந்தால் குடித்துவிட்டு இறந்திருப்பேன் எனத் தெரிவித்தார்.

இதனிடையே, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக மல்லை சத்யா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சியின் துணை பொதுச் செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதாகவும், 15 நாள்களுக்குள் எழுத்துப்பூர்வமாக தன்னிடம் பதிலளிக்கவும் வைகோ தெரிவித்துள்ளார்.

Mallai Sathya suspended from MDMK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடந்த 100 ஆண்டுகளில் முதல் முறை; முதல் நாளிலேயே சூடுபிடித்த ஆஷஸ் டெஸ்ட் தொடர்!

ஒவ்வொரு நாளுக்கும் நன்றி... பிரியங்கா மோகன்!

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

கண் கவர மறையும் சூரியன்... ரைசா வில்சன்!

SCROLL FOR NEXT