தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாட்டு மேடைக்கு அந்தக் கட்சியின் விஜய் வருகை தந்துள்ளார்.
மாநாடு மாலைக்கு மேல் துவங்கும் என்று கூறி இருந்த நிலையில், சென்னை, கோவை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று இரவே தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவியத் துவங்கினர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு சரியாக பிற்பகல் 3 மணிக்கு நாட்டுப்புற இசையுடன் தொடங்கியது.
தொடர்ந்து, கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தொண்டர்கள் உற்சாகத்துடன் கேட்டு ஆரவாரம் செய்து நடனமாடினர்.
இந்த நிலையில், ஆரவாரத்துக்கு மத்தியில் தொண்டர்களை நோக்கி இருகரம் கூப்பி விஜய் வணக்கம் செலுத்தி, பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த நடைமேடையில்(ராம்ப்) மாநாட்டு மேடைக்கு வருகை தந்தார். அவர் வரும்போது, விஜய்யின் குரலில் தவெகவின் கொள்கைப் பாடல் ஒளிபரப்பு செய்யப்படது.
தவெக கட்சியின் துண்டை தலையில் கட்டி, ராம்ப் வாக்கில் ஈடுபட்டார் விஜய். தடுப்புகளைத் தாண்டி தொண்டர்கள், விஜய்க்கு அளித்த மாலையை, அவர்களுக்கு திருப்பி அளித்தார் தவெக தலைவர் விஜய்.
தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாட்டு மேடைக்கு வந்த விஜய், தவெக கட்சியின் கொள்கைத் தலைவர்களின் படங்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் தவெக கட்சிக் கொடியினை விஜய் ஏற்றி வைத்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகி வாசித்த உறுதிமொழியை விஜய் ஏற்றார்.
இதையும் படிக்க: கனிவான குணத்தால் மக்களை ஈர்த்த நீதிபதி காலமானார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.