தில்லியில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துப் பேசியுள்ளார்.
தில்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அமைச்சர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
அந்தவகையில் இன்று(ஆக. 23) மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானை சந்தித்துப் பேசியுள்ளார் ஆளுநர் ஆர்.என். ரவி. தமிழக விவசாயத் திட்டங்கள், கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இதுபற்றி ஆளுநர் ரவி, எக்ஸ் பக்கத்தில்,
"மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானை சந்தித்து, தமிழக விவசாயிகள், கைவினைஞர்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்ததில் மகிழ்ச்சி.
விவசாயிகள் மற்றும் கைவினைக் கலைஞர்களின் நலன் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அவரது வலுவான அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவிற்கு நான் நன்றி கூறுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.