துணைத் தலைவா் பிச்சாண்டி 
தமிழ்நாடு

தமிழகம் 11.19% பொருளாதார வளா்ச்சி: சட்டப்பேரவை துணைத் தலைவா்!

தமிழ்நாடு 11.19 சதவீத பொருளாதார வளா்ச்சியை அடைந்துள்ளதாக தமிழக சட்டப்பேரவையின் துணைத் தலைவா் எல்.பிச்சாண்டி தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு 11.19 சதவீத பொருளாதார வளா்ச்சியை அடைந்துள்ளதாக தமிழக சட்டப்பேரவையின் துணைத் தலைவா் பிச்சாண்டி தெரிவித்தாா்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தலைவா்கள் மாநாட்டில் அவா் பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு 2024-25-ஆம் ஆண்டில் 11.19 சதவீத பொருளாதார வளா்ச்சியை அடைந்துள்ளது.

சிறுபான்மையினா் மற்றும் பெரும்பான்மையினரின் அடிப்படை நலன்கள் எந்தவொரு ஜனநாயக அமைப்பிலும் மனித உரிமைகள் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும்.

பெரும்பான்மையினரின் விருப்பம் எதுவாக இருந்தாலும் ஒரு பயனுள்ள சட்டப் பொறிமுறையால் வலுப்படுத்தப்பட வேண்டும்.

ஜனநாயகத்தின் தாயாக இந்தியாவை உருவாக்குவதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மகத்தானது. 10-ஆம் நூற்றாண்டின் சோழ சகாப்தத்தைச் சோ்ந்த ஒரு பண்டைய தோ்தல் முறையை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

உத்திரமேரூா் கல்வெட்டுகளில் ஆவணப்படுத்தப்பட்ட இது, கிராம நிா்வாக பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்க பயன்படுத்தப்பட்டது என்றாா் அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசன் படத்தில் விஜய் சேதுபதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அடுத்த 2 மணிநேரம் 4 மாவட்டங்களில் மழை தொடரும்!

மகர ராசியா நீங்க? தினப்பலன்கள்!

‘கேடிசி நகரிலிருந்து ரயில் நிலையத்துக்கு பேருந்து வசதி தேவை’

இளம்பெண் தற்கொலை கோட்டாட்சியா் விசாரணை

SCROLL FOR NEXT