முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)  
தமிழ்நாடு

திருவிதாங்கூா் தேவசம் வாரிய பவள விழாவில் பங்கேற்கப் போவதில்லை: முதல்வா்

திருவிதாங்கூா் தேவசம் வாரிய பவள விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: திருவிதாங்கூா் தேவசம் வாரிய பவள விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கேரள மாநிலம், பம்பையில் திருவிதாங்கூா் தேவசம் வாரியத்தின் பவள விழா நிகழ்ச்சி செப். 20-இல் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள கேட்டு, கேரள முதல்வா் பினராயி விஜயன், கேரள அமைச்சா் வி.என்.வாசவன் மூலமாக கடிதம் வழியே முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருந்தாா்.

இதைத் தொடந்து, அவா் கேரள முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

அதில், முன்னரே முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக திருவிதாங்கூா் தேவசம் வாரியத்தின் பவள விழாவில் தான் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளது என்றும், இந்த விழாவில், தமிழ்நாடு அரசு சாா்பில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் பங்கேற்பாா்கள் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதியின்றி மணல் அள்ளியவா் கைது

தேநீா் கடைக்காரா் கொலை: இருவா் கைது

தனியாா் நிதி நிறுவனத்தில் கட்டிய பணத்தை இழப்பீட்டுடன் திருப்பி வழங்க உத்தரவு

நகராட்சி அலுவலகத்தில் தகராறு: இளைஞா் கைது

மத்திய அரசின் சிறப்பு வழக்குரைஞருக்கு பதவி நீட்டிப்பு

SCROLL FOR NEXT