எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவதற்கு அண்ணாமலை உயிரைக் கொடுக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் மூன்றாம் தேதி மாலை 5 மணி அளவில் மதுரை மேற்கு தொகுதியில் பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் பிரசாரம் செய்கிறார். மதுரை மாவட்டத்திற்கு 8,000 கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டங்களை கொடுத்தவர் எடப்பாடி. மதுரை மக்கள் எடப்பாடி பழனிசாமியை இன்முகத்தோடு வரவேற்பார்கள்.
மதுரை மக்களின் குடிநீர் பிரசனையை சரிசெய்து இரண்டு தலைமுறை பயன்படும் அளவிற்கு தொலைநோக்கு பார்வையில் தண்ணீர் திட்டம் தந்தவர் எடப்பாடி பழனிசாமி. மதுரையின் வளர்ச்சிக்கு உயர்மட்ட பாலங்கள், பறக்கும் பாலங்கள், வைகை ஆற்றில் ஐந்து தடுப்பணை கட்டியதோடு, தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பும் வகையில் சீரமைப்பும் செய்துள்ளார்.
ஆனால் தற்போது மதுரை மாநகராட்சி ஊழல் நிறைந்த மாநகராட்சி. மதுரை கோயில் மாநகரம், இன்றைக்கு குப்பை மாநகரமாக மாற்றிய பெருமை மதுரை மாநகராட்சிக்கு சேரும், வரலாறு காணாத வகையில் மதுரை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டல தலைவர்கள் வரி முறை கேட்டால் ராஜிநாமா செய்துள்ளனர். திமுக ஊழல் மேயரை வைத்துக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கும்.
திருடனை வைத்துக் கொண்டே திருட்டை ஒழிப்பது போல இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவதற்கு அண்ணாமலை உயிரைக் கொடுக்க வேண்டாம், அவரது கட்சிக்காரர்களை தூண்டிவிட்டால் போதும். அவரது கட்சிக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்தால் போதுமானது. அதிமுக ஆட்சி மலரப்போகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.