எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் பலியானார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே கருப்பூர் இனாம் அருணாசலபுரம் கிராமத்தில் ஜாஸ்மின் என்ற பெயரில் சிவகாசி பாறைப்பட்டியைச் சேர்ந்த கண்ணபிரான் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இன்று மாலை 3 மணியளவில் பட்டாசு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலை முழுவதும் சேதம் அடைந்து தரைமட்டமானது. பட்டாசு ஆலையில் வேலை பார்த்த தொழிலாளர்கள் அங்கிருந்து சிதறி ஓடி உயிர் தப்பியுள்ளனர். பட்டாசு ஆலையின் அருகே இயங்கி வந்த கோழிப்பண்ணை முற்றிலும் தீயில் கருகி சேதம் அடைந்தது.
இந்த தீ விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக பட்டாசு ஆலை உரிமையாளர் கண்ணபிரானின் உறவினர் 50 வயது மதிக்கத்தக்க கந்தசாமி என்பவர் தப்பி ஓடி வந்த போது இரும்பு கம்பி வேலிகளில் சிக்கி உடல் கருகி உயிரிழந்து கிடந்தார். அவரது சடலத்தை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சம்பவ இடத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தூர் தீயணைப்பு நிலைய வாகனங்களும் வீரர்களும் வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.