முகப்பு
தமிழ்நாடு

ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்த தங்கம்!

தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 29 ஆகஸ்ட், 2025 at 10:27 AM
தங்கம் விலை உயர்வு
பகிர்:

தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் வரலாறு காணாத அளவில் முதன்முறையாக ஆபரணத் தங்கத்தின் விலை 76 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகிறது.

இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,040-ம் கிராமுக்கு ரூ.130ம் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ரூ. 9,535 ஆகவும், ஒரு சவரன் 76,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் ஒரு கிராம் ரூ. 9,470-க்கும், ஒரு சவரன் ரூ. 75,760-க்கும் விற்பனையானது. வர்த்தகம் நிறைவடையும்போது தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது.

வெள்ளியை பொருத்தவரை ஒரு கிராம் ரூ.130-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 1,30,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியா-அமெரிக்கா இடையே வரி உயர்வு உள்ளிட்ட சில காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலையும் உயர்ந்து வருவதாகத் தங்க மதிப்பீட்டாளர்கள் கூறியுள்ளனர். வரும் நாள்களில் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

summary

The price of gold has increased twice in a single day, causing shock among the people.

முழு கட்டுரையைப் படிக்க →