சென்னை பல்கலைக்கழகம் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

அண்ணா, சென்னை பல்கலை. பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

அண்ணா, சென்னை பல்கலை. பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு குறித்து...

தினமணி செய்திச் சேவை

தொடர் மழை காரணமாக, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (டிச. 2) நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச. 2) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று காலை (டிச. 1) முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நாளையும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை பல்கலைக் கழகத்தில் நாளை (டிச. 2) நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும், நாளை (டிச. 2) நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Chennai University Term Exams Postponed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிட்வா புயலால் கனமழை - புகைப்படங்கள்

கேரள முதல்வருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்: ‘பாஜகவின் அரசியல் விளையாட்டு’ -ஆளும் கம்யூ. விமர்சனம்

ரெட் அலர்ட்... சனம் ஷெட்டி!

கண் காணா அழகு... நபா நடேஷ்!

ஹலோ டிசம்பர்... அஞ்சு குரியன்!

SCROLL FOR NEXT