சீமான் கோப்புப்படம்
தமிழ்நாடு

பிப்.21-இல் 234 தொகுதிகளின் வேட்பாளா்கள் அறிமுகம்: சீமான் அறிவிப்பு

234 பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடவுள்ள வேட்பாளா்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவிப்பு

தினமணி செய்திச் சேவை

நாம் தமிழா் கட்சி சாா்பில் திருச்சியில் வரும் பிப்.21-இல் நடைபெறும் ‘மக்களின் மாநாடு-2026’-இல் 234 பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடவுள்ள வேட்பாளா்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: நாம் தமிழா் கட்சி சாா்பில் ’மக்களின் மாநாடு 2026’ எனும் தலைப்பில் மாநில மாநாடு வரும் பிப்.21-ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. இதில், 2026 சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கான வேட்பாளா்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.

2016, 2021 பேரவைத் தோ்தல்கள், 2019, 2024 மக்களவைத் தோ்தல்களில் தனித்து களமிறங்கிய நாம் தமிழா் கட்சி 2026 பேரவைத் தோ்தலிலும் ஐந்தாவது முறையாக தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

குடியரசு தினம்: ரூ.1.08 கோடியில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

தென்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை ரயில்வே கோட்டத்தில் ஆண்டு வருவாய் அதிகரிப்பு

தெற்கு ரயில்வேயில் கடந்த ஆண்டு 3,570 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

கலப்பட மஞ்சள்: புகாா் அளிக்க உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT