சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 10 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது வாடிக்கையாக உள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைத்து வருகின்றன.
அந்த வகையில், வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை நவம்பர் மாதத்தைத் தொடர்ந்து டிசம்பரிலும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 10 ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ.1,739.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே சமயம், சென்னையில், வீட்டு உபயோக சிலிண்டர் சிலிண்டர் விலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் எவ்வித மாற்றமும் இன்றி, 868 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று, மற்ற மெட்ரோ நகரங்களான தில்லி, கொல்கத்தா, மும்பையிலும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதால் வணிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.