டிட்வா -செயற்கைக் கோள் புகைப்படம் IMD
தமிழ்நாடு

சென்னைக்கு 50 கி.மீ. தொலைவில் டிட்வா! காற்றின் வேகம் அதிகரிப்பு!!

சென்னைக்கு 50 கி.மீ. தொலைவில் டிட்வா, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 50 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலை கொண்டிருக்கும் டிட்வா காரணமாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. தரைக்காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது.

கடந்த 6 மணி நேரமாக டிட்வா புயல் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், வட தமிழகம் - புதுச்சேரி கடற்கரைப் பகுதியிலிருந்து தாழ்வு மண்டலம் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால், பள்ளி மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி பள்ளிகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது.

டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக - புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் நிலவி வருகிறது. இது மணிக்கு 10 கி. மீ. என்ற வேகத்தில் வடதிசையில் நகர்ந்து, சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 50 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 40 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப் பகுதிக்கும் வடதமிழகம் - புதுச்சேரி கடற்கரைக்குமான குறைந்தபட்ச தொலைவு 40 கி.மீ. ஆக இருக்கிறது. இதன் காரணமாக, இன்று நண்பகல் வாக்கில் வடதமிழகம் - புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு தென்கிழக்கு 200 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் அவசரநிலை! உறைபனி, பனிப்புயல்!! 15 கோடி மக்கள் பாதிப்பு

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சத்துணவு , அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! முதல்வரின் அறிவிப்புகள் என்னென்ன?

ரவி மோகனின் கராத்தே பாபு டீசர்!

ஒவ்வொரு குடும்பத்திற்கும் விடியலை தந்துள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

SCROLL FOR NEXT