சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று(டிச. 1) காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்ந்து வந்த நிலையில், தற்போது மழையின் தீவிரம் அதிகரித்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சாலைகளில் அதிகப் படியான தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். தாழ்வான இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
சென்னையில் குறிப்பாக வேளச்சேரி, துரைப்பாக்கம், கிண்டி, வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. கடலோரப் பகுதிகளான பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று காலை(டிச. 1) முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
மேலும், புயல் சின்னம் அடுத்த 2 நாள்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வரும் டிச. 3 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.