மழை தொடரும் 
தமிழ்நாடு

சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! 5 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை நீடிக்கும்!

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, 5 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி மழை!

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் தொடர்ந்து காலை முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று பகல் 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிதமான மழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிட்வா புயலானது வங்கக் கடலில் சென்னையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கும் நிலையில், தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில், ஈக்காட்டுக்தாங்கல், கிண்டி, வேளச்சேரி, எழும்பூர், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதுவரை, இயல்பை விட வடகிழக்கு பருவமழை 8 சதவீதம் கூடுதலாக பதிவாகயுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இயல்பாக அக். 1 முதல் நவ. 30 வரை 35 செ.மீ. மழை பெய்யும். இந்த ஆண்டு இயல்பவை 35 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழை பெய்யும் என்றும், தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவைத் தலைவர் என்பவர் எதிர்க்கட்சியை சேர்ந்தவரும்தான்! கார்கே

பிரபு தேவாவின் மூன் வாக் வெளியீட்டு போஸ்டர்கள்!

புயல் வலுவிழந்தாலும் சென்னையில் கனமழை! பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை விடப்படுமா?

முக்கிய பிரச்னையை விட்டுவிட்டு நாடக உரை நிகழ்த்திய மோடி! கார்கே பதிலடி

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நாளை விருந்தளிக்கிறார் டி.கே.சிவகுமார்!

SCROLL FOR NEXT