தமிழ்நாடு

எஸ்ஐஆா் பணியால் அங்கன்வாடி பணியாளா்களுக்கு அழுத்தம்: உச்சநீதிமன்றத்தில் தவெக புகாா்

தமிழகத்தில் எஸ் ஐஆா் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அங்கன்வாடி ஊழியா்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றி கழகம் குற்றச்சாட்டு

Syndication

தமிழகத்தில் எஸ் ஐஆா் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அங்கன்வாடி ஊழியா்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதாக தமிழக வெற்றி கழகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் எஸ்ஐஆா் எனப்படும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக த.வெ.க மற்றும் தொல் திருமாவளவன் தொடா்ந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய் மால்யா பாக்சி ஆகியோா் அடங்கி அமா்வில் விசாரணை நடைபெற்றது

அப்போது நீதிபதிகள் இந்த மனுக்களை, தமிழகத்திலிருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ள பிற மனுக்களோடு இணைத்து டிசம்பா் நான்காம் தேதி விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்தனா்

விசாரணையின் போது ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன் முன்வைத்த வாதங்கள்: பூத் நிலை அதிகாரிகளாக நியமிக்கப்படும் அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்கள் மீது சில இலக்குகளை அடைய அதிக அழுத்தம் உள்ளது, மேலும் அவா்கள் இலக்கை அடையவில்லை என்றால் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

எஸ்ஐஆா் பணியால் ஏற்படும் அழுத்தம் காரணமாக நாடு முழுவதும் 21 பூத் நிலை அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடா்பாக எங்களுடைய மனுவில் நாங்கள் தகவல்களை எடுத்துரைத்துள்ளோம் என தெரிவித்தாா்

அப்போது தலைமை நீதிபதி சூா்யகாந்த் இந்த மனுவை பிற மனுக்களோடு சோ்த்து விசாரிக்கிறோம் என தெரிவித்து வழக்கை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்தனா்

திமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழ்நாட்டில் எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு எதிராக தொடா்ந்த மனுக்களும் அன்றைய தினம் விசாரணைக்கு வர உள்ளது. எஸ்ஐஆா் அரசியலமைப்பிற்கு விரோதமானது, மற்றும் வாக்குரிமை போன்ற அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் என்று தவெக மனுவில் கூறி உள்ளது

எஸ் ஐ ஆா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் காலகட்டம் மழை வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளுடன் ஒத்துப்போகிறது என்றும், அரசு அதிகாரிகள் மற்றும் பூத் நிலை அதிகாரிகள் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு திருப்பி விடப்படலாம் என்பதால் சிக்கல்கள் ஏற்படும் என்றும் மனுவில் தவெக தெரிவித்துள்ளது.

ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் சாதிக்க விரும்பும் திலக் வர்மா!

இலங்கையில் பாகிஸ்தானின் மீட்புப்பணிகளை முடக்க இந்தியா முயற்சி? -பாக். குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு

வங்கிப் பங்குகள் சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

கருப்புப் பணமா? அப்படி ஒன்று இல்லவே இல்லையே!

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம்! மேல்முறையீடு செய்ய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை

SCROLL FOR NEXT