அமித் ஷா | ஓபிஎஸ் 
தமிழ்நாடு

அமித் ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு?

ஓபிஎஸ்ஸின் தில்லி பயணம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவ. 24 ஆம் தேதி சென்னை வேப்பேரியில் நடைபெற அதிமுக உரிமை மீட்புக் குழு கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதாகவும் முன்பு இருந்ததைப் போன்று அதிமுக ஒன்றிணைய வேண்டும், இல்லையென்றால் இந்த விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஓபிஎஸ் தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் நேற்று(டிச. 2) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து சுமார் 20 நிமிடம் ஆலோசனை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பாஜகவின் முக்கிய தலைவர்களை ஓபிஎஸ் இன்று சநதிப்பார் என்று கூறப்படுகிறது.

தில்லி பயணத்திற்குப் பிறகு அதிமுக ஒருங்கிணைப்பு குறித்த அவரது முடிவுகள் என்னவென்று தெரியவரும். அதாவது பாஜக கூட்டணியில் மீண்டும் இணைவாரா? தனிக்கட்சி அறிவிப்பாரா?அல்லது அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்படுவாரா? என்பது தெரியவரும்.

Former CM OPS meet amit shah in Delhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? கடைசி வாய்ப்பு!

சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை!

அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

சொல்லப் போனால்... கூட்டணியில் வலுப்பெறும் பாரதிய ஜனதா?

SCROLL FOR NEXT