மழைநீர்த் தேக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நகரில் மழைநீர் தேங்கியிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த டிகேஎஸ் இளங்கோவன் ``மழையால் மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. தெருக்களில் மீட்பு நடவடிக்கைகளை நீங்கள் காணலாம்.
சில இடங்களில் மழைநீர் தேங்கியிருக்கலாம். ஆனால், பெரும்பாலான இடங்களில் நீர்த் தேக்கம் இல்லை. எந்தப் பிரச்னையும் இல்லை. மக்கள் இயல்பு வாழ்க்கையில் எளிதில் பயணிக்கின்றனர்.
ஒருவேளை விஜய் வீட்டில் நீர் தேங்கியிருக்கலாம். ஆனால், அவர்தான் வீட்டைவிட்டு வெளியில் வருவதேயில்லை. நகரில் என்ன நடக்கிறது என்பது அவருக்குத் தெரியாது. மழைநீர்த் தேக்கம் குறித்து பேசுவதற்கு அவர் நகர் முழுவதும் சென்று பார்த்தாரா? அவர் வீட்டிலிருந்து பேசுகிறார், அவ்வளவுதான்.
அதிமுக ஆட்சியில் எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது? என்பதை நீங்களே பாருங்கள். கடந்த 3 நாள்களாக மழை பெய்து வந்தாலும், நகரில் நீர்த் தேக்கம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது’’ என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.