புதுச்சேரி முதல்வருடன் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் சந்திப்பு  கோப்புப்படம்
தமிழ்நாடு

அனுமதி மறுப்பு: புதுச்சேரி முதல்வருடன் தவெக ஆனந்த் மீண்டும் சந்திப்பு!

புதுச்சேரி முதல்வருடன் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் சந்திப்பு பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் சாலை வலம் மேற்கொள்வதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் முதல்வர் ரங்கசாமியுடன் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மீண்டும் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.

கரூர் நெரிசல் பலி சம்பவத்திற்குப் பிறகு தவெக தலைவர் விஜய், தமிழகத்தில் சாலை வலம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அவர் காஞ்சிபுரத்தில் கல்லூரி ஒன்றில் ஏற்பாடுகள் மேற்கொண்டு மக்கள் சந்திப்பை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் விஜய் சாலைவலம் செல்ல அனுமதி கோரப்பட்ட நிலையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கள்கிழமை டிஜிபி அலுவலகத்துக்கு புஸ்ஸி ஆனந்த், அன்று இரவு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்துப் பேசினார். பின்னர் செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்திலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வரும் என்பதால் சாலைவலம் செல்ல அனுமதி இல்லை என காவல்துறையினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

அதேநேரத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தவெக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த், இன்று(புதன்கிழமை) மீண்டும் புதுச்சேரி முதல்வரைச் சந்தித்துப் பேசி வருகிறார்.

TVK Anand meeting with Puducherry CM Rangasamy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை!

அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

சொல்லப் போனால்... கூட்டணியில் வலுப்பெறும் பாரதிய ஜனதா?

ஓலா எலக்ட்ரிக் விற்பனை 31% சரிவு

SCROLL FOR NEXT