மாவட்டச் செயலாளர் பிறந்த நாள் விழா சர்ச்சை: தவெக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை!
தவெக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பற்றி...
தவெக நிர்வாகியின் பிறந்த நாள் சர்ச்சையான நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் உதயகுமார் பிறந்த நாளை தவெகவினர் நேற்று கொண்டாடியுள்ளனர்.
நேற்று இரவு உதயகுமார், திறந்த காரின் மீது ஏறி நின்று கொண்டு தனது ஆதரவாளர்களுடன் சாலை வலம் சென்றுள்ளார். நெரிசல் மிகுந்த பகுதியில் கிரேன் மூலம் மாலை அணிவித்து, சாலையின் நடுவில் கேக் வெட்டி, நூற்றுக்கணக்கனோர் கூடி பட்டாசு வெடித்து அவரின் பிறந்தநாளைக் கொண்டாடியதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு சாலைவலம் சென்றதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர். இதுதொடர்பான விடியோவும் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
இந்நிலையில் தவெக நிர்வாகிகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தங்களின் பிறந்தநாள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தும் போது, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு நடத்த வேண்டும். இதை அனைவரும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
Birthday party controversy: Bussy Anand warns TVK administrators
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.