கோப்புப் படம் 
தமிழ்நாடு

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, திருவள்ளூரில் மிக கனமழை!

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என அறிவிப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

திருவள்ளூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வடசென்னைக்குட்பட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அரியலூர், கோவை, கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தென்காசி, தஞ்சை, தேனி, திருவாரூர், திருச்சி, நெல்லை, காரைக்கால் மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு!

weather update heavy rain for Chennai thiruvallur

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! ஐடி பங்குகள் உயர்வு!

புதிய கண்ணோட்டத்தில் உலகைச் சுற்றி 2025 - புகைப்படங்கள்!

ஐயப்ப பக்தா்கள் ரயில்களுக்குள் கற்பூரம் ஏற்ற தடை: தெற்கு ரயில்வே அறிவிப்பு

இந்து மதத்தில் எத்தனை கடவுள்? ரேவந்த் ரெட்டி கருத்துக்கு வலுக்கும் கண்டனங்கள்!

ஊழியர்கள் பற்றாக்குறை? இண்டிகோவின் 70 விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT