காதல் திருமணம் செய்வதுதா மிகவும் கடினம் என சிவகாசியில் திருமண விழா ஒன்றில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இல்ல திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
விழாவில் பேசிய அவர்,
"சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. கண்டிப்பாக இந்த திருமண விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் வந்துள்ளேன்.
இங்கு வந்தபோதுதான் இது காதல் திருமணம் என்று கூறினார்கள். பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்துவைப்பது சிறப்பான நிகழ்ச்சிதான். ஆனால் அதைவிட கடினம் காதல் திருமணம். எல்லோரும் காதல் திருமணம் எளிது என்று நினைப்பார்கள். ஆனால் அது கடினம்.
முதலில் இருவரும் காதலை வெளிப்படுத்த வேண்டும். ஒருவரையொருவர் காதலை ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும். பின்னர் இருவரின் பெற்றோரையும் சம்மதிக்க வைக்க வேண்டும். அடுத்து சொந்தக்காரர்கள் எல்லாம் கிளம்பி வருவார்கள். பல்வேறு இடங்களில் இருந்து பிரச்னை வரும். தடை போட நினைப்பார்கள். அனைத்து தடைகளையும் மீறித்தான் இன்று இங்கு ஒரு காதல் திருநாம நடந்துகொண்டிருக்கிறது. அதனால் மணமக்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்" என்று பேசினார்.
உதயநிதி ஸ்டாலினும் தனது மனைவி கிருத்திகாவை காதலித்துதான் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | சென்னையில் மீண்டும் மழை! அவ்வப்போது திடீர் மழை பெய்யலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.