தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
டிட்வா புயல் வலுவிழந்த சென்னை கடற்கரை அருகே நிலைகொண்ட நிலையில், கடந்த மூன்று நாள்களாக இடைவிடாது மழை பெய்து வந்தது.
தற்போது சென்னை - புதுவை இடையே காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக கரையைக் கடந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழையின் தீவிரம் குறைந்தது.
இந்த நிலையில், இன்று காலை 10 மணிவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.