கோப்புப்படம்  
தமிழ்நாடு

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

டிட்வா புயல் காரணமாக கடந்த ஒரு வாரமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், புயல் சின்னம் கரையைக் கடந்தும் மழை தொடர்ந்து வருகின்றது.

இந்த நிலையில், இன்று காலை 10 மணிவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chance of rain in Chennai and 13 districts for the next 2 hours!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப். 2-ல் விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா!

வேலை செய்வதில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?

பனி போர்த்திய நகரமாய் மணாலி! கழுகுப் பார்வை காட்சி!

ஓபிஎஸ்ஸுடன் கூட்டணியா? நெல்லை தொகுதியில் போட்டியா? - நயினார் நாகேந்திரன் பதில்!

ஆண்ட பரம்பரை ரியல் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சியளித்த பென்ஃபிகா..! ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோல் அடித்த கோல்கீப்பர்!

SCROLL FOR NEXT