அம்மன் கோவில் 
தமிழ்நாடு

சேலம்: மேட்டூர் அருகே அம்மன் கோவிலில் தங்க நகைகள் திருட்டு!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே அம்மன் கோவிலில் தங்க நகைகள் திருட்டு போனது பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தாலி உள்பட ரூ.2 லட்சம் மதிப்புடைய தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேச்சேரியிலிருந்து பென்னாகரம் செல்லும் சாலையில் உள்ளது இரட்டைகிணறு. இங்கு காளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. சனிக்கிழமை அதிகாலை வந்த மர்ம நபர்கள் கோவிலின் மின்சாரத்தை நிறுத்தி எரிந்து கொண்டிருந்த மின்விளக்கை அணைத்தனர்.

பின்னர் அருகே இருந்த லாரியில் இருந்து இரும்பாலான லிவரை எடுத்து வந்து பூட்டை உடைத்துள்ளனர். அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்கத்தால் ஆன தாலி, பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த சுமார் 1 பவுன் எடை கொண்ட தங்க காசு மாலை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

இச்சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம ஆசாமிகளைத் தேடி வருகிறார்கள். மேச்சேரி பென்னாகரம் சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலையில் உள்ள கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்வு மையத்தில் குளறுபடி! குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

திமுக அரசின் குளறுபடியால் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தேர்வுகள் ரத்து: அண்ணாமலை கண்டனம்

ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் சல்மான்கான்! மோகன் பாகவத்தின் உரையை கேட்டார்!

குல்பதீன் அதிரடி: நியூசிலாந்துக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!

ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கி ஸ்டாலின் சாதனை: இபிஎஸ்

SCROLL FOR NEXT