சநாதானம் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்துவதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ``வட மாநிலங்களில் வேண்டுமென்றால், அவர்கள் நினைக்கும் காரியங்கள் ஈடேறலாம். தமிழகத்தைப் பொருத்தவரை, ஜாதி, மத, இன, மொழிகளுக்கு அப்பாற்பட்டு நடைபெறுகிற ஆட்சி.
நயினார் நாகேந்திரனின் கனவு பகல் கனவாகத்தான் இருக்கும். இது திராவிட மண். இங்கு மத ஒற்றுமை, மத நல்லிணக்கம் பேணிக் காக்கப்படும். அனைத்துத் தரப்பட்ட மக்களும் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிற மண் இது.
எந்தவொரு பொருளையும் மையப்படுத்தி, மக்களைப் பிளவுபடுத்தக் கூடாது என்றுதான் கூறுகிறோம். சமாதானம் என்பது அனைத்து நிலையிலும் மக்களைச் சமன்படுத்துவது.
சநாதனம், மக்களிடையே பிரிவினை ஏற்படுத்துகிறபோது, அதனை எதிர்க்கிற அரசு இந்த அரசு’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.