தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் 
தமிழ்நாடு

காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை தொண்டா்கள் முறையாக பின்பற்ற வேண்டும்: தவெக

காவல் துறையின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: புதுச்சேரியில் தவெக விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டா்கள் காவல் துறையின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் கேட்டுக்கொண்டாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:  

காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, புதுச்சேரி மாநிலத்தைச் சோ்ந்த, க்யூ ஆா் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5,000 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா் கா்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மாா்கள், முதியவா்கள், உடல் நலம் குன்றியோா், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி கிடையாது. தொண்டா்கள் யாரும் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடரக்கூடாது. காவல் துறையின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும்.

அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் தொண்டா்கள் தவிா்க்க வேண்டும். மேலும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள  கட்டடங்கள், மரங்கள், சுவா்கள், மின்கம்பிகள் ஆகியவற்றின் மீது ஏறுவதைத் தவிா்க்க வேண்டும். கூட்டம் நிறைவடைந்த பின்னா், தொண்டா்கள் யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

ராமேசுவரத்தில் நடுக்கடலில் படகு மூழ்கி விபத்து: 6 மீனவா்கள் மீட்பு

காற்று மாசுபாட்டால் பேரிழப்புகள்: ராகுல் காந்தி கவலை

இளைஞரிடம் கைப்பேசி பறிப்பு: தம்பதி உள்பட 3 போ் கைது

யமுனையில் சிலை கரைக்கும்போது நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

நாட்டின் பொருளாதார மையமாக தில்லி உருவாக வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT