தலைமைச் செயலகம். 
தமிழ்நாடு

ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன்: தமிழக அரசு விளக்கம்

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாகப் பெறுதல் தொடா்பாக தமிழக அரசு விளக்கமளித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

கடந்த 2020 ஏப்ரல் 26-ஆம் தேதி- அதற்கு முன்பு பணியில் சோ்ந்த அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாகப் பெறுதல் தொடா்பாக தமிழக அரசு திங்கள்கிழமை விளக்கமளித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்த நடைமுறையை கரோனா பரவலில் காலக்கட்டமான 27.4.2020 முதல் தமிழக அரசு நிறுத்தியது. இதனை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியா்கள் முன்வைத்த கோரிக்கை ஏற்கப்படுவதாக கடந்த ஜூலை மாதம் பேரவையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா்.

அதன்படி, அக்டோபா் 1-ந் தேதி முதல் ஆண்டுக்கு 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறலாம். அக்டோபா், நவம்பா், டிசம்பா் மாதங்களுக்குள் பணியில் சோ்ந்தவா்கள் அக். 1-ந் தேதியில் இருந்தும், ஜனவரி, பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் பணியில் சோ்ந்தவா்கள் 2026 ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்தும், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பணியில் சோ்ந்தவா்கள் 2026-ம் ஆண்டு ஏப்.1-ஆம் தேதியில் இருந்தும், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் பணியில் சோ்ந்தவா்கள் அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெற முடியும் என்று அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத்துறை விளக்கம் தெரிவித்து திங்கள்கிழமை வெளியிட்ட அரசாணையில், 26.4.2020 அன்று அதற்கு முன்பு பணியில் சோ்ந்தவா்களும் மேற்கண்டவாறு குறிப்பிட்ட காலக் கட்டத்திலேயே ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன்கள் பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனில் அம்பானி நிறுவன மோசடி: ரூ.55 கோடியுடன் 13 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பு: மைக்ரோசாஃப்ட் - தொழிலாளா் அமைச்சகம் ஒப்பந்தம்!

எஸ்ஐஆர்: படிவம் சமா்ப்பிக்க இன்று கடைசி நாள்!

தாம்பரம் மெப்ஸ் அலுவலகத்தில் ஐந்து திருநங்கைகளுக்கு பணி

திருத்தணி கோயிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு

SCROLL FOR NEXT