கோப்புப்படம் 
தமிழ்நாடு

பொங்கல் பண்டிகைக்கு திமுக அரசு ரூ.5000 கொடுக்க வேண்டும்: இபிஎஸ்

பொங்கல் பண்டிகைக்கு ரூ.5000 கொடுக்க வேண்டும் என்று இபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: வரும் 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு, தமிழக மக்களுக்கு திமுக அரசு ரூ.5,000 கொடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் வைத்துள்ளார்.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது. இதில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அடுத்து, அதிமுக தலைவர்கள் பலரும் உரையாற்றினர். நிறைவாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது, அவர் பேசுகையில், எனக்குப் பின்னாலும், அதிமுக மக்களுக்கான இயக்கமாக செயல்படும். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அதிமுக மக்களுக்காக உழைக்கும். அதிமுக யாருக்கும் அடிமையல்ல, அப்படி காங்கிரஸ் கட்சியிடம் அடிமையாக இருந்தது திமுகதான்.

அதிமுகவில் விசுவாசமாக உழைப்பவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். திமுகவில், ஸ்டாலின் குடும்பத்தினருக்கே ஆட்சி, அதிகாரம். ஆனால், அதிமுக ஜனநாயக இயக்கம், உழைப்பவர் உச்சபட்ச பதவிக்கு வர வாய்ப்புள்ளது.

திமுக போல மன்னர் ஆட்சி, வாரிசு ஆட்சி அதிமுகவில் இல்லை என்று கூறினார்.

மேலும், நான் முதல்வராக இருந்த போது மக்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது ரூ.2500 கொடுத்தது அதிமுக அரசு. நீங்கள் வரும் பொங்கலுக்க ரூ.5000 கொடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் நான் வேண்டுகோள் வைக்கிறேன் என்றார் எடப்பாடி பழனிசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நானே... ஃபாத்திமா சனா ஷேக்!

ஹார்ட் பீட் தொடர் நடிகருக்கு நடைபெற்ற திருமணம்!

பிக் பாஸ் 9: காதலிப்பதற்காக பிக் பாஸ் வந்தார் விஜே பார்வதி!

என்றும்... சகத் கன்னா!

உன்னோடு... ரீம் சமீர் ஷேக்!

SCROLL FOR NEXT