சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வரும் டிச. 16, 17 மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வடகிழக்குப் பருவமழை விரைவில் முடிவடையவுள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை தொடர்பான தகவல்களை சமூக ஊடங்களில் வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான், வடகிழக்குப் பருவமழை தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
வடகிழக்குப் பருவமழை கிட்டதட்ட முடிவுக்கு வரவுள்ளது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் டிச. 16,17 ஆம் தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பூண்டி மற்றும் புழல் ஏரிகள் 100% முழு கொள்ளளவை எட்டியுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரியும் முழு கொள்ளளவை விரைவில் எட்டும்.
வடகிழக்குப் பருவமழையானது, கடந்த 2019-க்குப் பிறகு, ஆறு ஆண்டுகள் கழித்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இயல்புக்கும் குறைவாக மழை பதிவாகவுள்ளது.
மோசமான பருவமழை அல்ல, டிட்வா புயலால் பெய்த கனமழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. ஏரிகள் நிரம்பியுள்ளன. சென்னையில் கோடைக்காலத்தில் தண்ணீர் பஞ்சம் இருக்காது.
இன்றும்(டிச. 10), நாளையும் (டிச. 11) டெல்டா மாவட்டங்கள், தூத்துக்குடி, ராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பிடத்தக்க வேறு ஏதும் இல்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் மாத இறுதியில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக, தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 2026 தேர்தல்: காங்கிரஸ் சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு! கால அவகாசம் நீட்டிப்பு!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.