அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள சைவ, அசைவ உணவுப் பட்டியல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு அதிமுகவின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் காலை முதல்வே மண்டபத்துக்கு வெளியே குவியத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், அவர்களுக்கு வழங்கப்படவுள்ள உணவுப் பட்டியல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
காலை உணவு
கேசரி, வடை, பொங்கல், இட்லி, சாம்பார், கார சட்னி, தேங்காய் சட்னி, வாட்டர் பாட்டில், காபி / டீ.
மதிய அசைவ உணவு
பிரட் அல்வா, மட்டன் பிரியாணி, தாளிச்சா, ஆனியன் தயிர் பச்சடி, கத்திரிக்காய் கட்டா, மட்டன் குழம்பு, சிக்கன் 65, வஞ்சரம் மீன் வருவல், முட்டை மசாலா, வெள்ளை சாதம், தக்காளி ரசம், தயிர், இஞ்சி புளி மண்டி, பருப்பு பாயாசம்
மதிய சைவ உணவு
தம்ஃப்ரூட் அல்வா, புடலங்காய் கூட்டு, சைனீஸ் பொரியல், மாவடு இஞ்சி, நிலக்கடலை மண்டி, பிளாக்காய், உருளை மசாலா, பருப்பு வடை, அப்பளம், ஊறுகாய், மோர் மிளகாய், வெஜ் பிரியாணி, தயிர் பச்சடி, சாதம், கத்தரிக்காய், முருங்கக்காய், பீன்ஸ் சாம்பார், வத்தல் குழம்பு, தக்காளி ரசம், தயிர், பருப்பு பாயாசம், வாட்டர் பாட்டில், வாழைப்பழம்
மேலும், கூட்டத்துக்கு நடுவே சிற்றுண்டியாக மிக்ஸர், சிப்ஸ், ஸ்வீட், பிஸ்கட், வாட்டர் பாட்டில் உள்ளிட்டவை பேக் செய்யப்பட்டு, நிர்வாகிகளின் இருக்கையிலேயே வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.