பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

தேசிய உணர்வை ஒளிரச் செய்தவர் பாரதி! மோடி தமிழில் புகழாரம்!

பாரதியாருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்...

இணையதளச் செய்திப் பிரிவு

மகாகவி பாரதியார் தேசிய உணர்வை ஒளிரச் செய்தவர் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை புகழாரம் சூட்டியுள்ளார்.

நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், பிரதமர் மோடி, பாரதியாரைப் புகழ்ந்து தமிழில் பகிர்ந்துள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன. இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார்.

நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார். தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பிலாதவை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Bharathi was the one who ignited the spirit of national pride: Modi's tribute in Tamil!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அர.செட்டிப்பட்டி அரசுப் பள்ளிக்கு பேரூராட்சித் தலைவா் கணினி அளிப்பு

ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் அஷ்டமி சிறப்பு பூஜை

ரூ. 2,500 கோடி திரட்டிய பேங்க் ஆஃப் இந்தியா

கேபினட் அமைச்சா்கள் இல்லாததால் மாநிலங்களவை சற்றுநேரம் ஒத்திவைப்பு! வருத்தம் தெரிவித்தாா் கிரண் ரிஜிஜு

ஆஸ்திரேலியா: தடையை எதிா்த்து ரெடிட் வழக்கு

SCROLL FOR NEXT