ரயிலில் 63 கிலோ கஞ்சா கடத்திய வடமாநிலத்தைச் சேர்ந்தவருக்கு கோவை நீதிமன்றத்தில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை ரயில் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி திருவனந்தபுரம் ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் சோதனை நடத்தினார்கள்,
அப்பொழுது அந்த ரயிலில் கோவை ரயில் நிலையத்துக்கு வந்தபோது குறிப்பிட்ட ரயில் பெட்டியிலிருந்து மூன்று சாக்கு முட்டை இறங்கி நபரை மடக்கிப் பிடித்தனர், அவர் கொண்டு வந்த ஒவ்வொரு சாக்கு முட்டையிலும் 21 கிலோ வீதம் மொத்தம் 63 கிலோ கஞ்சா இருந்தது. இவற்றைப் பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் அதனைக் கடத்தி வந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது அவர் சுகில் முண்டா என்றும் மேற்குவங்க மாநில பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
கஞ்சாவைக் குறைந்த விலைக்கு வாங்கி கோவையில் கல்லூரி மாணவர்கள் உள்பட பலருக்கும் விற்பனை செய்வதற்காகக் கடத்தி வந்ததாக சுகில் முண்டா தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு கோவை போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு மாற்றப்பட்டது. இந்த வழக்கு கோவை போதைப்பொருள் தடுப்பு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நடத்திய நீதிபதி ராஜலிங்கம் சுசில் முண்டாவுக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞர் சிவக்குமார் ஆஜராகி வாதாடினார். தண்டனை விதிக்கப்பட்ட சுகில் முண்டா கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.