முதல்வர் ஸ்டாலின் கோப்புப்படம்.
தமிழ்நாடு

மத்தியப் புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது பாஜக அரசு: முதல்வர் ஸ்டாலின்

மத்தியப் புலனாய்வு அமைப்புகளை பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துவதை மீண்டுமொருமுறை நீதித்துறை அம்பலப்படுத்தியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

மத்தியப் புலனாய்வு அமைப்புகளை பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துவதை மீண்டுமொருமுறை நீதித்துறை அம்பலப்படுத்தியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், நேஷனல் ஹெரால்டு வழக்குத் தீர்ப்பின் மூலம், எதிர்க்கட்சித் தலைவர்களைப் பழிவாங்குவதற்காக மத்திய பா.ஜ.க. அரசினால் மத்தியப் புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை மீண்டுமொருமுறை நீதித்துறை அம்பலப்படுத்தியுள்ளது.

சட்டரீதியான எந்தவொரு முகாந்திரமும் இன்றி, இத்தகைய வழக்குகள் அரசியல் எதிரிகளைத் துன்புறுத்தவும் களங்கப்படுத்தவுமே தொடரப்படுகின்றன. உண்மையையும் அச்சமின்மையையும் தங்கள் பக்கம் கொண்டுள்ள நாடாளுமன்றக் காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் எனது சகோதரர் ராகுல் காந்தியும் தவறிழைக்காதது நிரூபணமாகியுள்ளது.

ஆனாலும், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பின் மாண்புநெறிகளில் அவர்கள் உறுதியாக நிற்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத பா.ஜ.க.வானது காந்தி குடும்பத்தினரைத் தொடர்ந்து வேட்டையாடுவதில் குறியாக உள்ளது.

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக விலக்கிய நிதீஷ் குமார்!

பா.ஜ.க.வின் இந்தப் பழிவாங்கும் நோக்கம் நாட்டின் உயர் புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மையை மீண்டும் மீண்டும் சிதைத்து, அவற்றை வெறுமனே அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதற்கான கருவிகளாகச் சுருக்குகின்றது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

In the National Herald case, the judiciary has once again exposed the Union BJP government’s misuse of central agencies to target opposition leaders Says Mk Stalin.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியை யாராலும் வீழ்த்த முடியாது: மு. வீரபாண்டியன்

பாதுகாப்பான பேருந்து இயக்க விழிப்புணா்வு வாரம்

சிஐடியூ கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பொருளாதார வளா்ச்சி, மனிதகுல எதிா்காலத்துக்கான முக்கிய இயந்திரம் அறிவியல்! நோபல் விஞ்ஞானி மவுங்கி பவெண்டி

எழுத்தாளா் அண்டனூா் சுராவின் உப்புலிக்குடி நாவலுக்கு பரிசு

SCROLL FOR NEXT