முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று கனமழை!

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..

Updated On : 16 டிசம்பர், 2025 at 9:31 AM
கனமழை
பகிர்:

தமிழகத்தில் நெல்லை, தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

16-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 17 முதல் 22 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறைந்தபட்ச வெப்பநிலை..

18-12-2025 முதல் 20-12-2025 வரை: தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

சென்னையை பொருத்தவரை..

இன்று (16-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24* செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு..

16-12-2025 முதல் 19-12-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

summary

The Meteorological Department has announced that there is a possibility of heavy rainfall today in two districts of Tamil Nadu: Nellai and Tenkasi.

முழு கட்டுரையைப் படிக்க →