சென்னை உயா்நீதிமன்றம் 
தமிழ்நாடு

நகராட்சி நிா்வாகத்துறைக்கு எதிரான வழக்கு: உள்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றது தொடா்பாக அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கில்

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றது தொடா்பாக அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கில் தமிழக உள்துறைச் செயலா், அமலாக்கத் துறை இயக்குநா், டிஜிபி ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரையை சோ்ந்த ஆதிநாராயணன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2024-25 ஆம் ஆண்டுகளில், தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில், உதவிப் பொறியாளா், இளநிலை பொறியாளா், சுகாதார ஆய்வாளா் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், ஒரு பதவிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை என்ற அடிப்படையில் மொத்தமாக ரூ.634 கோடி லஞ்சமாக பெறப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆதாரங்களுடன் தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை 232 பக்கங்கள் கொண்ட கடிதத்தை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டியது காவல் துறையின் கடமை. இதுபோன்ற ஊழல் வழக்குகளை அமலாக்கத்துறை நேரடியாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க முடியாது. மாநில போலீஸாா் வழக்குப்பதிந்தால், அதன் அடிப்படையில்தான் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய முடியும். எனவே, அமலாக்கத் துறை டிஜிபிக்கு ஆதாரங்களை அனுப்பியுள்ளது. ஆனால், இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே, தமிழக அரசு வெளிப்படையான நிா்வாகத்தை உறுதி செய்யும் வகையில், இந்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யக் கோரி டிஜிபிக்கு கடந்த நவம்பா் மாதம் மனு அளித்தேன்.

அதன்மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக அரசின் தலைமைச் செயலரிடம் உரிய அனுமதிப் பெற்று வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக உள்துறைச் செயலா், அமலாக்கத்துறை இயக்குநா், டிஜிபி ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன.23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

மேலும், தமிழ்நாட்டில் மணல் குவாரி முறைகேடு தொடா்பாக அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யக் டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையையும் ஜன.23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸ் எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்தார் பிரக்ஞா சதவ்!

கட்டுக்கடங்காத கூட்டம்! ஈரோட்டில் தன் பலத்தை நிரூபித்தாரா செங்கோட்டையன்?

சத்தீஸ்கர்: சுக்மாவில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

புரட்சித் தலைவருக்குப் பிறகு புரட்சித் தளபதிதான் மக்களுக்காக வாழ்பவர்: செங்கோட்டையன்

சாதனையை முறியடித்த லயன்: நாற்காலியைத் தூக்கி வீசிய மெக்ராத்!

SCROLL FOR NEXT