விஜய் செய்தியாளர் சந்திப்பு: இதுவரை செய்தியாளர் சந்திப்பை விஜய் ஏன் நடத்தவில்லை என்ற கேள்விக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்பு மாநில பொதுச் செயலாளர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்பு மாநில பொதுச் செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஈரோட்டில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வருகை தர உள்ள நிலையில், அதற்காக செங்கோட்டையன் அவரது தலைமையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, விஜய் தற்பொழுதுவரை செய்தியாளர் சந்திப்பு நடத்தவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அருண்ராஜ், ”தற்பொழுதுவரை ஆட்சியாளர்களும் முறையாக செய்தியாளர் சந்திப்பை நடத்தவில்லை.
விஜய்க்கு மக்களை சந்திக்க அதிக விருப்பம் உள்ளது. ஆனால், பாதுகாப்பு காரணம் மட்டும்தான் ஒரு பிரச்னையாக இருக்கிறது. காவல்துறையும் போதிய ஒத்துழைப்பு தருவதில்லை. அரசும் காவல்துறைக்கு போதிய சுதந்திரத்தை அளிப்பதில்லை” எனத் தெரிவித்தார்.
மேலும், விஜய் எடுத்த விடியோக்கள் ஜன நாயகன் படத்திற்காக எடுத்துக் கொண்டார்கள் என்று சிலர் கூறிவரும் கருத்துக்கு, அது ஒரு அருவருக்கத்தக்க விமர்சனம் என்றும், அதுபோன்ற தேவை எங்களுக்கு இல்லை என்றும், அருவருக்கத்தக்க பிரசாரங்களை திமுகவால்தான் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.
”விஜய்யின் பயணத்திட்டம் தெரிந்தால் மக்களிடையே பாதுகாப்பு பிரச்னை ஏற்படும், அதனால் அவரது பயண திட்டம் என்பது பாதுகாப்புக் குழுவினரால் முடிவு செய்யப்படுகிறது. அதன்படிதான் நடக்கும்” என அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: உற்பத்தித் துறை, மின்னணு பொருள் ஏற்றுமதியில் அதிரடி காட்டியிருக்கும் அரசு: அமைச்சர் தங்கம் தென்னரசு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.