புதிய ஊரக வேலைத் திட்ட மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: புதிய ஊரக வேலைத் திட்டம், வேலை பெறுவோரின் எண்ணிக்கையை குறைக்கவும், வேளாண் பருவ காலத்தில் விவசாயத் தொழிலாளா்களின் ஊதியத்தை குறைக்கவும் வழிவகை செய்வதுடன், மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச் சுமையையும் ஏற்படுத்தும்.
ஏற்கெனவே, நிதிப் பகிா்வு மூலம் குறைந்த ஒதுக்கீட்டை பெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டுக்கு இந்த மசோதா வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.