விஜய் பிரசாரம்: ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவருக்கு பல்வேறு கேள்விகள் எழுப்பி நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான பிறகு, தமிழகத்தில் முதல்முறையாக விஜயமங்கலம் அருகே திறந்தவெளி பிரசாரக் கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டு பேசவுள்ளார்.
இந்த கூட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த போஸ்டர்களில் கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் நலம்விசாரிக்காததற்கு எதிராக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
“ஈரோடு வரைக்கும் வந்தீங்களே, கரூருக்கு போக மாட்டீங்களா??”, “இங்க இருக்க கரூருக்கு போகல, ஆனா ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா போறீங்க? வாட் ப்ரோ இட்ஸ் வெறி ராங் ப்ரோ (What bro it's very wrong bro)" உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதனிடையே, ஈரோடு பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு விஜய் வரவுள்ள நிலையில், கோவை விமான நிலையத்தில் தொண்டர்களுக்கு அனுமதி அளிக்காமல் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.