கோவை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ஈரோட்டுக்கு தவெக தலைவர் விஜய் புறப்பட்டார்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான பிறகு, தமிழகத்தில் முதல்முறையாக விஜயமங்கலம் அருகே திறந்தவெளி பிரசாரக் கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டு பேசவுள்ளார்.
இந்த கூட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு வருகைதந்த விஜய்க்கு, தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவை விமான நிலையத்துக்குள் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. விமான நிலையத்துக்கு வெளியே தடுப்புகள் அமைத்து, அதன்பின் தொண்டர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, வெளியே வந்த விஜய், கார் மீது நின்றவாறு கூடியிருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்தார்.
தொடர்ந்து,பிரசாரம் நடைபெறவுள்ள விஜயமங்கலம் பகுதிக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக கார் மூலம் புறப்பட்டுச் சென்றார். அவரின் காரைப் பின்தொடர்ந்து செல்லக் கூடிய கார்களின் எண்களும் காவல்துறையிடம் ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜய்யின் காரை சில தவெக தொண்டர்கள் இரு சக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.