நெல்லயில் பொருநை அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழகத்தின் 3, 200 ஆண்டு கால வரலாற்றை பறைசாற்றும் வகையில், ரூ.56 கோடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன.
இந்த நிலையில் பொருநை அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைக்கிறாா்.
அருங்காட்சியக வளாகத்தில் வன்னி மரத்தை நட்டு வைத்து, ரிமோட் மூலம் கல்வெட்டை அவர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, எ.வ.வேலு, கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூா் காட்சிக்கூடம்-2, சிவகளை காட்சிக்கூடம்-1, கொற்கை காட்சிக்கூடம்-2, நிா்வாக கட்டடம்-1 உள்பட மொத்தம் 7 தொகுதிகளாக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட சுகாதார வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.