பள்ளி வேன் சக்கரம்  
தமிழ்நாடு

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

கோவை மாநகரில் ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

கோவையில் அமைந்துள்ள ஜிடி நாயுடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பள்ளி வேனில் இருந்து பின்பக்க டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜிடி நாயுடு மேம்பாலம் மீது பள்ளி வேன் சென்று கொண்டிருந்த போது, திடீரென அந்த வேனிலிருந்து பின் பக்க சக்கரம் கழன்று பின்பக்கமாக ஓடியிருக்கிறது.

ஆனால், இது வேன் ஓட்டுநருக்குத் தெரியவரவில்லை. திடீரென வேன் சக்கரம் இல்லாத பகுதியில் சரிந்து நிற்பதைப் பார்த்த ஓட்டுநர் உடனடியாக வேனை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தினார்.

பிறகு வாகனத்தை சோதனை செய்தபோது டயர் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்து. சக்கரம் எங்கு சென்றது என்பது தெரியாமல், நீண்ட நேரமாக ஓட்டுநர் தேடிய நிலையில், சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் கிடந்த சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது.

பிறகு, அந்த சக்கரம் வேன் இருந்த இடத்துக்கு உருட்டிக் கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தால் மேம்பாலத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும், ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT