திருநெல்வேலி மாவட்டத்திற்கு சனிக்கிழமை வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக சனிக்கிழமை வந்த தமிழக முதல்வருக்கு திமுக தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி மலைப் பகுதியில் 13 ஏக்கா் பரப்பில் 54,296 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று(டிச. 20) திறந்து வைத்தார்.
இன்று(டிச. 21) திருநெல்வேலி, அரசு மருத்துவக் கல்லூரி திடலில் நடைபெற்ற அரசு விழாவில் திருநெல்வேலி மாவட்டத்துக்கான ரூ.694 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, உரையாற்றினார்.
அப்போது, நெல்லை மாவட்டத்துக்கான 3 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
முதல் அறிவிப்பு – திருநெல்வேலி மாநகர், காந்திநகரில் அமைந்திருக்கக்கூடிய ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில், ரூ.16 கோடி செலவில், அனைத்து வசதிகளுடன் புதிய மகளிர் தங்கும் விடுதி அமைக்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு – சேரன்மகாதேவி வட்டம் முக்கூடல், பாப்பாக்குடி கிராம விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையில், காங்கேயன் கால்வாய் மற்றும் வெள்ளோடையை மேம்படுத்தும் பணிகள் ரூ. 4 கோடியே 1 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
மூன்றாவது அறிவிப்பு – நான்குநேரி மற்றும் ராதாபுரம் வட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ரூ. 5 கோடி செலவில், வள்ளியூர் பெரிய குளம் மற்றும் வள்ளியூரான் கால்வாய் ஆகியவை புனரமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.